×

வண்டலூரில் ரூ.92 கோடியில் மேம்பாலம் உள்பட ரூ.212 கோடி செலவில் புதிய பாலங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: வண்டலூரில் ரூ.92 கோடி செலவில் மேம்பாலம் உள்பட மொத்தம் ரூ.211 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் ரூ.91 கோடியே 80 லட்சம் செலவில் தேசிய நெடுஞ்சாலையை சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய ஒரு ஏறு தளம் மற்றும் இரண்டு இறங்கு தளங்களுடன் கூடிய பல்வழி பரிமாற்ற மேம்பாலம் மற்றும் வண்டலூர் - மண்ணிவாக்கம் வரையிலான 2.65 கிலோ மீட்டர் நீள பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை இணைக்கும் கூவம் ஆற்றின் குறுக்கே கண்ணப்பாளையம், சென்னை- புலிகாட் சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி, ராணிப்பேட்டை மாவட்டம், வளர்புரம் - கிருஷ்ணாபுரம் சாலையில் கிருஷ்ணாபுரம் உள்பட பல மாவட்டங்களில் மொத்தம் ரூ.211 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் மணிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : bridges ,Vandalur ,New Bridges of Construction , Vandalur, Rs. 92 crore, Uppalam, Rs.
× RELATED வண்டலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி