×

அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில் திருந்திய நெல்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் ராஜாபாளையம் கிராமத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் திருந்திய நெல்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான  பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஸ்டீபன்ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் செல்வகணபதி வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர்கள் தினேஷ்குமார்,ராமு முன்னிலை வகித்தனர்.
விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தினகரன் கலந்து கொண்டு திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பங்களான ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.

உதவி பேராசிரியர்கள் வீரமணி, திலகம் ஆகியோர் நெல்லில் களைகளை கட்டுப்படுத்தும் கோணோ லீடர் பயன்பாடு. நீர் மேலாண்மையில் நீர்மறைய நீர் பாய்ச்சுதல்,இலை வண்ண அட்டையை பயன்படுத்தி உரமிடுதல். நெற்பயிரில் பூச்சிகளை அடையாளம் கண்டு கட்டுபடுத்துதல். ஆணை கொம்பன் ஈயை கண்டுபிடித்து கட்டுபடுத்துதல் மற்றும் குலைநோயை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரையும் நெல் பயிரிட்டுள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்று அந்த இடத்தில் வைத்தே வேளாண்துறையினர் பயிற்சியும் விளக்கமும் அளித்தனர். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பார்கவி மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Dam, Rice Cultivation, Farmers, Training
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...