×

சிஏஏவுக்கு எதிராக ஓவிய போராட்டம் சட்டத்தை வாபஸ் பெற்றால் பிரதமர் மோடியுடன் பேச தயார்: மம்தா பேச்சு

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஓவியம் வரையும் நூதன போராட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சிஏஏ தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச தயார். ஆனால் முதலில் அந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்’’ என்றார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக போராடி வருகிறார். அதோடு இந்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது என மம்தா தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியம் வரையும் நூதன போராட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இப்போராட்டத்தை தொடங்கி வைத்த மம்தா, என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியம் ஒன்றையும் வரைந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘குடியுரிமை சட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடந்த பிரதமர் மோடி தயாராக இருப்பதாக கூறுவது நல்ல விஷயம். ஆனால் அதற்கு முன் அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படி செய்தால், பிரதமருடன் பேச தயார். காஷ்மீர் விவகாரத்திலும், சிஏஏ குறித்தும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தாமலேயே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது’’ என்றார்.

Tags : Mamata ,Modi ,CAA , CAA, painting struggle, law, withdrawal, PM Modi, ready to speak, Mamta talk
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்