×

பைக் திருடர்கள் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு அம்மையம்மாள் தெருவை சேர்ந்தவர் தனசந்திரன் (58). இவரது பைக் சமீபத்தில் திருடு போனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் பைக் திருடி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த பாய் அப்பு (எ) சசிகுமார் (21), ராஜா தோட்டத்தை சேர்ந்த கவி (எ) கவியரசன் (25) என்பது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணையில், இவர்கள் புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags : Bike thieves , Bike, thieves, arrested
× RELATED பைக் திருடர்கள் சிக்கினர்