×

பாளை அரியகுளத்தில் அதிசய பப்பாளி மரம்: ஆண் மரத்தில் கொத்து, கொத்தாக காய்கள்

நெல்லை: பாளை அரியகுளத்தில் ஆண் பப்பாளி மரம் பூ பூத்து, கொத்து கொத்தாக காய்ப்பதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பாளை அரியகுளத்தை சேர்ந்தவர் தங்கசாமி. காங்கிரஸ் பிரமுகர். இவர் வீட்டு வளாகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பப்பாளி கன்றை நட்டார். மரத்தை வைக்கும்போது ஆண் பப்பாளி மரம் காய்க்காது என சிலர் தெரிவித்தனர். ஆனால் நிழலுக்கு இருக்கட்டுமே என அதை அவர் விட்டுவிட்டார்.
தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பூ பூத்து, கொத்து கொத்தாக காய்கள் தொங்குகின்றன.

மரத்தில் 16 காய்களும், ஒரு பழமும் காணப்படுகின்றன. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர். இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பப்பாளி மரத்தில் ஆண், பெண் என இருவகை மரங்கள் உள்ளன. இதில் ஆண் மரங்கள் பூக்கள் மட்டுமே பூக்கும். காய்கள் வருவதில்லை. பெண் மரங்கள் பூக்கள் பூத்து, காய்கள், பழங்களை தரும். சில இடங்களில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஆண் மரங்களும் காய்களை தருகின்றன. பப்பாளியில் உள்ள வகைகளில் ேகா3, கோ7 ரகங்களிலும் பெரும்பாலும் ஆண் மரங்களை இத்தகைய காய்களை தருவதுண்டு. ஆனால் ஆண் மரங்களில் வெளிவரும் காய்கள் சிறிய அளவில் இருக்கும்’’ என்றனர்.

Tags : Bali is a rare papaya tree
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...