×

டவுன் சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு: வெளியூர் செல்லும் வாகனங்கள் தடுமாற்றம்

நெல்லை: நெல்லை டவுன் சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் தட்டுதடுமாறி செல்கின்றன. நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகமிருக்கும். நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து பாபநாசம், முக்கூடல், தென்காசி செல்லும் வாகனங்கள் டவுன் ரதவீதிகளுக்குள் வராமல் தெற்கு மவுன்ட் ரோடு வழியாகவே சென்று வருகின்றன. இச்சாலை சமீபகாலமாக குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கின்றன.

இச்சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு முன்பாக தற்போது பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கழிவுநீர் சாலையின் இருமருங்கிலும் தேங்கியுள்ளது. பஸ்கள் சாலையில் செல்லும்போது கழிவுநீர் பாதசாரிகள் மேல் தெறிக்கிறது. இதனால் சாலையின் ஒருபகுதியில் பேரி கார்டுகளை வைத்து போக்குவரத்து போலீசார் அடைத்துள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் கூறுகையில், ‘டவுன் தெற்கு மவுன்ட் ரோட்டில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை உடைத்து தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இக்கழிவுநீர் அருகில் உள்ள கால்வாயில் கலந்து விடுவதால் கழிவுநீர் குறைவாக உள்ளது. இருப்பினும் சாக்கடை உடைப்பதால் வாகனங்கள் அப்பகுதியில் தினமும் ஊர்ந்து செல்கின்றன. பாதசாரிகள் அப்பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் அங்கு பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய முன்வரவேண்டும்’’ என்றார்.

Tags : Breakdown ,Down Under Road ,Town Road Town Under Road , Down road, sewer, breakage
× RELATED கொரோனா பரிசோதனையிலும் தளர்வுகள்...