கடலுக்குள் மியூசியம்

நன்றி குங்குமம் முத்தாரம்

மெக்சிகோவின் கான்கன் நகரில் உள்ள கடலுக்குள் அமைந்துள்ளது இந்த மியூசியம். சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குள் இருக்கும் இதில் 500 சிலைகள் இருக்கின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்லர் என்ற சிற்பியும் ஐந்து மெக்சிகோ சிற்பிகளும் சேர்ந்து இந்தச் சிலைகளை வடித்துள்ளனர். இதில் டெய்லர் வடித்த சிலைகள் அதிகம். 2009-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்ட மியூசியம் நவம்பர் 2010-இல் திறக்கப்பட்டது.

ஸ்கூபா டைவிங் முறையிலும் வழிகாட்டுநரின் உதவியுடனும் தான் மியூசியத்தைப் பார்வையிட முடியும் என்றாலும் வருடத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் குறைவில்லாமல் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். இந்த மியூசியம் பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags : SEA ,Sea Museum , Sea Museum
× RELATED 'பூங்காற்று திரும்புமா...என் பாட்டை...