×

முண்டந்துறை காப்பக பகுதியில் புலியின் கால்தடம் பதிவு

வி.கே.புரம்:  முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலியின் கால்தடம் பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று (27ம் தேதி) வரை நடந்த இப்பணியில் வன உயிரின ஆய்வாளர் தர் தலைமையில் பயிற்சி பெற்ற சென்னை பீட்டர் கல்லூரி, திருச்சி பிஷப் கல்லூரி, நெல்லை சேவியர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி, பிஎஸ்என் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 60 பேர், வேட்டை தடுப்பு காவலர்கள் 80 பேர், தன்னார்வ  தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 40 பேர் கணக்
கெடுப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பீட் பகுதியில் கல்லூரி மாணவர், வனத்துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  5 பேர் இதற்கான பணியில் ஈடுபட்டனர். தினமும் 5 கி.மீ. தொலைவு வரை சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். முண்டந்துறை பாதர்மலை பீட்டில் இணை இயக்குநர்  ஓம்காரம் கொம்மு கணக்கெடுக்கும் பணியைத் துவக்கிவைத்தார்.
தொடர்ந்து 5 நாள் மேற்கொண்ட கணக்கெடுப்பு நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலை திரும்பி வந்தனர். இக்கணக்கெடுப்பில் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட
சொரிமுத்தய்யனார் கோயில் பீட் பகுதியில் புலியின் கால் தடம் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது. இதே போல் 2 சிறுத்தைகளின் கால் தடமும் பதிவானது தெரியவந்துள்ளது. இதனிடையே கோரையாறு பீட் பகுதியில் புலியின் எச்சமும், ஆலடியூர் பீட் பகுதியில் சிறுத்தையின் கால்  தடமும் பதிவாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Mundundurai, Tiger, footprint, record
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...