×

சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழக அரசுக்கு இந்திய தூதரகம் கடிதம்

பெய்ஜிங்: சீனாவில் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று இந்திய தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சீனாவில் இருக்கும் இந்திய தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசுக்கு பெய்ஜிங் துணை தூதர் கடிதம் அனுப்பியுள்ளார். சீனாவில் தமிழக மாணவர்கள் நிலை குறித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சீனாவின் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அங்கு தமிழக மாணவர்கள் பலர் சிக்கி தவிப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தது.

ஆதலால் சீனாவில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு தமிழக அரசு, மத்திய அரசின் உதவியை நாடி இருந்தது. இது தொடர்பாக சீனாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகத்திற்கு கடந்த 24ம் தேதி தமிழக அரசு சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்து. இந்நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு இருக்கக்கூடிய தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. சீனாவில் வைரஸ் தாக்கம் அரிகரித்துள்ள நிலையில் அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்று மாணவர்களின் குடும்பங்களின் சார்பில் ஒரு கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்குள்ள மாணவர்களும் தங்களுடைய வாட்ஸ் ஆப் மூலமாக வீடியோகளை பதிவு செய்து அனுப்பியிருந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என சீனாவில் உள்ள இந்திய தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags : Tamil ,China ,Indian Embassy ,government , China, Corona Virus, Tamil Students, Defense, Tamil Nadu Government, Indian Embassy Letter
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்