×

இந்தியாவில் திறமையாளர்களுக்கு முகவரி கிடையாது: நீதியரசர் கிருபாகரன் வேதனை

சென்னை:  இந்தியாவில் திறமையாளர்களுக்கு முகவரி கிடையாது என நீதியரசர் கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வார இதழ் ஒன்றின் தொடக்க விழாவில் நீதியரசர் கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், நவீன இயந்திரங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றி விட்டனர் என அவர் வேதனை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், சிவாரிசு மூலம் முன்னேறிவிடலாம் என்ற இழிநிலை இந்தியாவில் பரவிருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, விளையாட்டு என்பது தமிழ் கலாச்சாரத்தின் அங்கம் என குறிப்பிட்ட கிருபாகரன், இளம் தலைமுறையினருக்கு விளையாட்டை பற்றி எதுவும் தெரியவில்லை என வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் உள்ள விளையாட்டு துறைகளில் சரியான முறையில் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதில்லை. மாணவர்களின் திறமையை பள்ளிப்பருவத்திலேயே கண்டறிந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அனைத்து துறையிலும் திறமையுள்ளவர்களை உயர்த்தி பிரிப்பதற்கான தரமான செயல்முறைகள் எதுவுமில்லை என நீதியரசர் கிருபாகரன் வேதனையடைந்தார்.

Tags : India ,Talented , India, Talent, Address, Justice Kripacharan, Pain
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...