×

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுகவினர் போராட்டம்: காவல்துறை அனுமதி

தஞ்சாவூர்:  ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி திமுக நடத்தும் போராட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுசூழல் அனுமதியோ, மக்களிடம் கருத்து கேட்பதோ தேவையில்லை என மத்தியஅரசு அறிவித்திருக்கும் நிலையில்,  அதனை திரும்பபெற வலியுறுத்து திமுகவினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பபெற வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கபடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில்,  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதையடுத்து, தஞ்சை, திருவாரூர், நாகையில் போராட்டம் நடத்த திமுக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி தஞ்சை, திருவாரூரில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென திமுகவினர் தெரிவித்ததையடுத்து,  சிலமணி நேரத்திற்கு பின்னர் காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, நாகூர், கடலூர், புதுக்கோட்டையிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


Tags : fight ,DMK ,Tamil Nadu , Tamil Nadu, hydrocarbon project, DMK, agitation, police, sanction
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...