×

காஷ்மீர் பண்டிட்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு

மங்களுரூ: `காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீருக்கு திரும்புவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது’ என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமானதை தொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டில் அங்கு வாழ்ந்த இந்துக்களான பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்துவோம் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், மங்களூருவில் நேற்று நடந்த பாஜ பேரணியில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கும் விடுக்கும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீரில் இருந்து கடந்த 1990ல் தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்களை திரும்ப காஷ்மீருக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது எந்த மத உணர்வையும் புண்படுத்துவதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக மத துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மையின இந்துக்கள், சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று நேருவை காந்தியடிகள் வலியுறுத்தினார். பிரதமர் மோடி காந்தியின் கனவுகளை நனவாக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Rajnath Singh ,pundits ,home ,Kashmir , Kashmir, Pandits, Rajnath Singh, Speech
× RELATED இந்தியா மண்ணை ரஃபேல் விமானங்கள்...