×

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முகத்தில் தாடியுடன் இருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பல்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்டாலின், இது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
உமர் அப்துல்லாவின் இந்தப் படத்தைப் பார்த்த போது ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது. உரிய நடைமுறையோ, விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல காஷ்மீர் தலைவர்கள் பற்றியும் இதே கவலை ஏற்படுகிறது. காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதுடன், அங்கு மீண்டும் இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : leaders ,Release ,Kashmir ,MK Stalin , Home Guard, Kashmir Leader, Release, MK Stalin, Insistence
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...