×

சென்னையில் 31ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: .தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : Job camp ,Chennai , Employment Camp, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...