சிறை கைதி திடீர் சாவு

புழல்: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட புழல் சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை சங்கராபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் பாலவிநாயகம் (53). இவர் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மதுரை நீதிமன்றத்தால் ஆறு மாதம் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட இவரை, சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பதற்காக புழல்  தண்டனை சிறைச்சாலையில் 23ம் தேதி சேர்த்தனர். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Prisoner , Prisoner, Sudden Death
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...