×

கொரோனாவால் ஊர் திரும்ப முடியவில்லை கீழக்கரை பகுதி மக்கள் சீனாவில் சிக்கி தவிப்பு

கீழக்கரை: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலர் உயிரிழந்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பலர் வியாபாரத்திற்காக சீனாவில் உள்ளனர். இதுகுறித்து கீழக்கரையை சேர்ந்த அலி லாப்ரி கூறுகையில், ‘‘நான் சீனாவின் சென்சென் நகரத்தில் வசித்தேன். கடந்த மாதம் குடும்பத்தோடு கீழக்கரை திரும்பி விட்டேன். இதனால் இந்த புதிய நோய் பாதிப்பில் இருந்து தப்பி விட்டேன். டிசம்பர் மாதமே இந்த நோயின் தாக்கம் அங்கு தொடங்கி விட்டது. ஆனால் இந்த வைரஸ் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. தற்போது அங்குள்ள எனது உறவினர்களிடம் பேசினேன். அவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டு விட்டது. இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து வெளியேறி வருவது பெரும் சிரமம்’’ என்றார்.

Tags : Corona ,home , Corona, Trail, Down Under, People, China, Stuck
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...