×

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்

டெல்லி: மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பேனர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சி.எம்.சி மருத்துவ கல்லூரியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவால், வேலூர் மருத்துவ கல்லூரி மிகவும் சிறப்பான கல்வி நிறுவனம். ஆகவே இந்த  நீட் தேர்விலிருந்து விதிவிலக்கை நீங்கள் அளிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து, விசாரணை தொடர்பாக நீதிபதி அருண் மிஸ்ரா சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். அச்சமயம் பேசிய நீதிபதிகள், நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்துவிட்ட விஷயம் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக உள்ளது. நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. நீட் தேர்வில் இருந்து ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? நீட் போன்ற தேர்வு முறைகளை மாற்றியமைப்பது நீதிமன்றங்களில் வேலையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நான் இந்த நீதிமன்றத்தில் இருக்கும் வரை நீட் தேர்வின் மூலம் தான் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடைபெறும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதிலிருந்து பின்வாங்க போவதில்லை என்ற ஒரு அதிரடியான கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : NEET Examination , Medical study, NEET exam, no going back, judge plan
× RELATED கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்