×

திருச்சியில் திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்

திருச்சி:  திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேருவின் நியமனம் திமுகவிற்கு வலு சேர்க்குமா? திருச்சியில் 31ம் தேதி நடக்கும் மாநாடு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், வெளியிட்டுள்ள அறிவிப்பில்;  திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார், எனவே தற்பொழுது அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே.என். நேரு தலைமையில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.  இதனால் நேருவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியான நிலையில், திமுக தலைமை கழகம் அவருக்கு திமுகவின் முதன்மை செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். மேலும் 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். தற்பொழுது திருச்சியில் திமுகவின் முக்கிய தலைவராக கே.என்.நேரு திகழ்கிறார்.

Tags : KN Nehru ,DMK ,chief secretary ,Trichy KN Nehru ,Trichy , Trichy, DMK, Principal Secretary, KN Neru, Appointment
× RELATED திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து...