×

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா: கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், குடமுழுக்கு நிர்வாகிகள் பங்கேற்பு

தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கொடிமரம் அமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலில் வருகின்ற பிப்ரவரி-5-ம் தேதி குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், தொல்லியல்த்துறை அதிகாரிகளும் இரவும் பகலுமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கொடிமரம் நடும் பணி மகாநந்தி எதிரே இருக்கும் கோயில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கொடிமரம் என்பது கிட்டத்தட்ட 15 நாட்களாக தீவிர பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனுடைய சிறப்பு என்பது 40 அடி உயரம் கொண்ட இந்த கொடிமரம், ஓரே மரத்தில் ஆன பர்மா தேக்கில் உருவாக்கப்பட்டது.

இதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆய்வாளர்களை அழைத்து இந்த கொடிமரத்தை உருவாக்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கோயில் வளாகத்தில் இருந்து இந்த கொடிமரமானது தயாரிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் இந்த கொடிமரத்தை ஏற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், பெருவுடையாருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பாலபிஷேகம்  செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள்  முன்னிலையில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி, பல எதிர்ப்புகளை மீறி தற்போது  நடைபெற இருக்கிறது.

குறிப்பாக கொடிமரம் ஏற்றப்படுவது தேவாரம், திருவாசகம் பாடி தான் கொடிமரம் ஏற்றப்பட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள், தமிழ் தேசியவாதிகள் உள்ளிட்டோர் பலமுறை கோரிக்கைகளை வைத்து இருந்தார்கள். இந்த நிலையில் சமஸ்கிருத மொழியில் தான் கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இதுகுறித்து இன்று  முழுமையான தீர்ப்பு வர இருக்கிறது. கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், தொல்லியல்த்துறை அதிகாரிகளும், பெரிய கோயில் குடமுழுக்கு அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.


Tags : Kudumbamukku Festival ,Big Temple ,Thanjai Periya Temple: Public ,Planting Ceremony ,Kudumbulungu Festival , Thanjai, Big Temple, Kudumbulungu Festival, Flag-tree, Planting Ceremony
× RELATED பக்தனுக்காக கொடிமரத்தை விலக்கிய பெருமாள்