×

குடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்

விளாத்திகுளம்:  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் யூனியனுக்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எஸ்.குமராபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ராஜா என்பவர் தலைமையாசிரியராகவும் பாக்கியசெல்வி என்பவர் இடைநிலை ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், புதூர் பிடிஓக்கள் பிரபு, சிவபாலன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உட்பட பலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதியகட்டிடம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு காலை 11.30 மணிக்கு மேல் சென்றுள்ளனர்.

பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்ததை பார்த்த எம்எல்ஏ சின்னப்பன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். இதில் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி குடியரசுதினவிழா கொண்டாடப்படவில்லை என்பதும், நேற்று பள்ளிக்கு ஆசிரியர்கள் இருவரும் வரவில்லை என்பதும் தெரியவந்தது. உடனடியாக பள்ளியின் கொடிக்கம்பத்தை சீரமைத்து எம்எல்ஏ சின்னப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதுபற்றி மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன் விசாரித்து, தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் இடைநிலை ஆசிரியை பாக்கியசெல்வி இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

Tags : H.M. ,Republic Day Festival School ,author ,HM Editor ,Republic Day , Republic Day, non-school, HM Editor, Suspend
× RELATED ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில்...