×

கான்ட்ராக்டர்கள் சரமாரி குற்றச்சாட்டு: 280 கோடி நிதியை விடுவிக்க மாட்டோம்: ஆசிய வளர்ச்சி வங்கி குழு கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: 280 கோடி நிதியை முறையாக செலவு செய்யாமல் இழுத்தடிப்பதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தான் காரணம் என கான்ட்ராக்டர்கள் சரமாரி குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் ஆசிய வங்கி குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை மூலம் செய்து தரப்படுகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் 280 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், பெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கு கடந்த மார்ச் முதல் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை எடுத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு 55 முதல் 60 நாட்கள் வரை பில் தொகை செட்டில் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.

இதனால், ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து, பணிகளை செய்யாமல் சுணக்கம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் இப்பணிகளின் நிலை தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியை சேர்ந்த அனிதா குமாரி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் 10 சதவீதம் நிதியை கூட செலவிடாமல் இருக்கிறீர்கள், இந்த நிதியை முழுவதுமாக செலவிட்டு பணிகளை முடிக்கா விட்டால் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியை தராது. தமிழக அரசின் நிதியில் நீங்கள் பணியை முடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினர்.

அப்போது கான்ட்ராக்டர்கள் தரப்பில், 2 முதல் 3 மாதங்கள் வரை பில் செட்டில் செய்யாமல் உள்ளனர். பணம் தந்தால் தான் எங்களால் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும். முன் அனுபவம் இல்லாத அதிகாரிகளால் தான் பணிகளை எங்களால் உடனடியாக முடிக்க முடியவில்லை என்று கூறினார்கள். அப்போது ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் தரப்பில், கான்ட்ராக்டர்களுக்கு உடனடியாக பில் தொகை செட்டில் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Asian Development Bank Group , 280 Crore Fund , not to be released , Asian Development Bank Group
× RELATED கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ஷாருக் நிதியுதவி