×

ட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100!

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தற்போது வரை உயிரோடுள்ள இந்திய வீரர்களில் மிக மூத்தவரான வசந்த்  ராய்ஜி மும்பையில் நேற்று தனது 100வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்  டெண்டுல்கர், ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் இருவரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  1940களில் மும்பை, பரோடா அணிகளுக்காக 9 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள வசந்த் ராய்ஜி மொத்தம் 277 ரன்  எடுத்துள்ளார் (அதிகம்: 68). இவர் லாலா அமர்நாத், விஜய் மெர்ச்சன்ட், சி.கே.நாயுடு, விஜய் ஹசாரே ஆகியோருடன்  இணைந்து விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படமும் வாழ்த்து தகவலும்  ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.Tags : Corner ,Vasant Raiji 100 ,Vasant Raiji , Tweet Corner ... Vasant Raiji 100!
× RELATED ட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்!