×

சாமிதோப்பு தலைமைபதியில் நாளை தை திருவிழா தேரோட்டம்

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தை திரு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி 8ம் திருவிழா நடந்தது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

நாளை 27ம் தேதி (திங்கள்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை அய்யாவுக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு  தேரோட்டமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். இரவு 12மணிக்கு அய்யா  காளை வாகனத்தில்  பவனி வருகிறார்.


Tags : Chamidopu ,festival ,Thai , Samitopu, Thai festival Therottam
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை