×

நீலகிரியில் கடும் பனிப்பொழிவு தேயிலை செடிகள் கருகின

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் செடி கொடிகள் மற்றும் புல் தரைகள் பனி நிறைந்து வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காணப்படுகிறது. ஆனால் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக ஜனவரி மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளது.

நீலகிரியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காளான் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilgiris ,tea plants , Nilgiris, heavy snow, tea plant
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்