×

குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ( எம்எஸ்எம்இ) சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.  பட்ஜெட்டில் இத்துறை நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இரு நிதி தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளது. தனியார் முதலீடு ( பிரைவேட் ஈக்விட்டி) மற்றும் வென்சர் கேபிட்டல் பண்ட் ஆகிய இரு நிதி தொகுப்புகளும் ரூ.10,000 கோடியில்  அமைக்கப்பட உள்ளது. கடனில் தத்தளிக்கும் இத்துறை நிறுவனங்களை மீண்டும்  லாப பாதைக்கு மீட்டு வர ரூ.5,000 கோடி நிதி தொகுப்பு பயன்படும். இந்த இரு நிதி தொகுப்புகளையும் உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த  யூ.கே.  சின்ஹா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதி தொகுப்பை இம்முறை எஸ்பிஐ கேப்ஸ் நிர்வகிக்கும். கடந்த காலங்களில் இதை சிட்பி  எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கி நிர்வகித்தது.Tags : Financial Assistance to Small and Medium Enterprises ,Government ,Small and Medium Enterprises , Government Financial Assistance to Small and Medium Enterprises
× RELATED வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லாத...