மொழிப்போர் தியாகிகள் தினம்: உதயநிதி ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை மூலகொத்தளம் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசன், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் திமுகவினர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ரவிச்சந்திரன்  மற்றும் பகுதி செயலாளர்கள் சுரேஷ், கே.பி.சங்கர், தனியரசு,  வடசென்னை மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மருதுகணேஷ், ஏ.பி.மணி, குறிஞ்சி கணேசன் வட்ட செயலாளர்கள் கவுரீஸ்வரன், பாலன், மாநில மாணவரணி துணை  செயலாளர் கவி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>