×

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு; வெற்றியாளர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு

சென்னை: தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பு: அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கும் மாநில பயிற்சி மையமாக அகில இந்திய குடிமைப்பணி  தேர்வு பயிற்சி மையம் உள்ளது.  இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற  உள்ளுறை பயிற்சியாளர்களில்  41 பேர் மத்திய  தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் முதலிய அகில இந்திய பணிகளுக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி   பெற்றுள்ளனர்.

இப்பயிற்சி மையமானது தமிழ் நாட்டில் அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வுகளை வருகிற 6, 7ம் தேதிகளில் பயிற்சி மையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. டெல்லியில்  தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும் வழிச் செலவுகளுக்காக தலா ரூ.2000 வழங்கப்படுகிறது. அகில இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற  தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்  கொள்ளலாம். இவர்கள் விண்ணப்பத்தினை  பயிற்சி மைய முதல்வருக்கு aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.



Tags : IAS ,winners , IAS, IPS Main Examination; Model personality selection for winners
× RELATED திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி...