×

பி.எஸ்.என்.எல் குடியரசு தின சலுகை அறிவிப்பு

சென்னை: 71வது குடியரசு தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு மொபைல் சேவையில்  சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளான் 1999ன் வேலிடிட்டியை  345  நாட்களுக்கு பதிலாக 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு வழங்குகிறது. 1999 பிளானில் தினம் மூன்று ஜிபி டேட்டாவும் அளவில்லா அழைப்புகளும், 100 குறுஞ்செய்தி வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், பிளான் 1999ல் பி.எஸ்.என்.எல் டியூன் மற்றும் பி.எஸ்.என்.எல் டிவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.  இச்சலுகை இன்று முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை கிடைக்கும்.

சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். சிம் விற்பனை 11.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிஎஸ்என்எல் குறைத்த கட்டணத்தில் சிறப்பான சேவையை   சந்தாதாரர்களுக்கு வழங்க உறுதிப்பூண்டுள்ளது.


Tags : BSNL ,Republic Day Offer Announcement , BSNL Republic Day Offer Announcement
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு