×

மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் நாளை (26ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ பங்கேற்க உள்ளார். இந்நிலையில் 71வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை வாழ்த்த விரும்புகிறேன் என கூறினார். மேலும் பேசிய அவர்; நமக்கு பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதை வேளாண் திட்டங்கள் உறுதி படுத்துகின்றன. மத்திய அரசின் ஜல் அந்தோலன் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலக்கை ஜிஎஸ்டி பூர்த்தி செய்துள்ளது.  கல்வி வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளது.

தூய்மை இந்தியா பொதுமக்களின் பங்களிப்பால் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பெருமைப்பட வேண்டிய ஒன்று. இது ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியுள்ளது. இதில் 8 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இந்த அரசு நிரந்தர தீர்வை கொண்டு வந்துள்ளது. சமூகநலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை. கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளன.

தூய்மை இந்தியா திட்டம் அதிக மாற்றங்களை கொண்டு வந்த திட்டமாக உள்ளது. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.


Tags : Republic Day ,Mahatma Gandhi ,speech ,Ramnath Govind , Mahatma Gandhi, Youth, Ramnath Govind
× RELATED தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி...