×

அஞ்செட்டி அருகே முகாமிட்டுள்ள 30 யானைகள் குட்டையில் குளித்து கும்மாளம்

தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100 யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதியில் நான்கு பிரிவுகளாக பிரிந்து ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் யானை கூட்டத்தை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள 30 யானைகள் நேற்று மதியம் கேரட்டி கிராமம் அருகே உள்ள சுக்கன்குட்டை என்ற குட்டையில் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்தும் குளித்தும் கும்மாளம் அடித்தன.

இதை அப்பகுதியில் செல்வோர் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். தகவல் அறிந்து வந்த அஞ்செட்டி வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் யானைகளை  காட்டிற்குள் விரட்டினர்.


Tags : Anjetti Anjetti , Anjetti, the elephants
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும்...