×

விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்

திருப்பூர், திருப்பூரில், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் மருத்துவ குணம் வாய்ந்த ஆடைகளை தயார் செய்ய அடல் இன்குபேஷன் மையம் முடிவு செய்துள்ளது. இத்தாலி வல்லுநர்கள் திருப்பூர் அடல் இன்குபேஷன் மையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அடல் இன்குபேஷன் மைய தலைமை செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது: பின்னலாடை உற்பத்தியில், பல்வேறு செயற்கை நூலிழையை பயன்படுத்தி, புதியரக பேன்சி ரக ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் மருத்துவ குணம் வாய்ந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகள் கிடைப்பதில்லை. சாக்ஸ் போன்ற நெகிழும் தன்மையுள்ள கம்ப்ரஸ் கார்மென்ட் துணியை இத்தாலியிலுள்ள ஒரு முன்னணி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

உடல் தசையை இறுக்கமாக பற்றியிருக்கும் இவ்வகை ஆடைகள், ரத்த ஓட்டத்தை சீராகவும், தோல் மற்றும் திசுக்களின் வெப்பநிலையை சீராகவும் வைத்திருக்கும். விளையாட்டு வீரர்கள் அணியும் ஷார்ட்ஸ், ஸ்லீவ்ஸ், ஸ்லீவ்லெஸ் மற்றும் காலுறை ஆடைகள் கம்ப்ரஸன் கார்மென்ட் துணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள், கால் நரம்பு பிரச்னையுள்ளவர்கள் அணியும் காலுறைகள் என அனைத்து வித மருத்துவ ஆடைகளை தயாரிக்கவும் இத்தொழில் நுட்பம் உதவும். அதற்காக கம்ப்ரஸன்கார்மென்ட் துணி வகைகளை திருப்பூரிலேயே தயாாிக்க தேவைப்படும் தொழில் நுட்பத்தை கொண்டு வர உரிய முயற்சி எடுக்கப்படும். விரைவில் மருத்துவ ஆடைகளை தயார் செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.


Tags : athletes ,Atal Incubation Center , Athlete, Medical Clothing, Atal Incubation Center Program
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...