×

பருத்தி பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?: விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசனை

அரியலூர்: தா.பழூர், அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் கருப்பிலா கட்டளை கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.ஆகையால் கருப்பிலா கட்டளை கிரமத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் மூலம் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர். வயல்வெளி ஆய்வில் பருத்தியில் பூச்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அசுவினி, வெள்ளை ஈ, அமெரிக்கன் காய்ப்புழு, பழுப்புநிற காய்ப்புழு, இலை சிவப்பாகுதல் போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது. அதற்கு முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் கோடை உழவு மற்றும் விதைகள் கோ.ஆர்.சி.எச்-2ஈ என்ற விதையை விதைப்பதற்கு பயன்படுத்தும்படியும், விதையை விதை நேர்த்தி செய்து விதைக்கும்படியும், மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் பயிர் செய்ய வேண்டும். முதலில் அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூச்சி நோய் மேலாண் முறைகளை கையாண்டு பருத்தி சாகுபயில் அதிகப்படியான மகசூல் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அடுத்து வயல்வெளி சென்று பூச்சிகள் பாதிக்கப்பட்ட செடிகளை பார்வையிட்டு வரும் வருடத்தில் பருத்தி பயிரிடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருத்தி விதை 300 -450 கிராம் நடவு செய்யும் படியும் இடைவெளி 3 - 3 அடி என்ற அளவில் பின்பற்றி ஆரம்ப காலத்தில் வு வடிவ குச்சிகள் மற்றும் மஞ்சள் நிற வண்ண அட்டை, நீலநிற வண்ண அட்டைகளை பயன்படுத்தி அசுவினி, வெள்ளை ஈ போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். விளக்குப்பொறியினை பயன்படுத்தி நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் நடமாட்டத்தை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறிகளைக் கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். உரம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவது குறைக்கவும் மேலும் நுவுடு எனப்படும் பொருளாதார சேதநிலைக்கு பயிர்கள் உட்படும்போது சரியான நேரத்தில் தரமான பூச்சிகொல்லிகளை சரியான அளவில் தெளிக்க வேண்டும் என தொழில்நுட்பவல்லுநர் அசோக்குமார் கூறினார்.

மேலும் எந்திரங்களை கொண்டு பருத்தி நடவு செய்ய வேண்டும், களை எடுக்க பவர் வீடர் என்றும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் பருத்தி அறுவடை செய்யும் போது பருத்தி எடுக்க இயந்திரம் இருப்பதாகவும் அதை பயன்படுத்தி ஆட்கள் பற்றாகுறையை செலவினை குறைக்கலாம் என்று தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் கூறினார். மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் செல்வி சோபனா கூறுகையில், விவசாயிகள் அனைவரும் குழுவாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான பஞ்சகாவ்யா பூச்சிவிரட்டிகளை அவர்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இனக்கவர்ச்சி பொறி, முட்டை அட்டை ஒட்டுண்ணி, பி.டி. என்னும் மருந்து ஆகியவற்றை விவசாயிகள் மையத்தை தொடர்பு கொண்டு வாங்கி பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டார்.வயல்வெளி ஆய்வின் போது முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார், மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் சோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : insect attack ,insect attacks , Cotton crop, insect attack, consultation with technicians
× RELATED நெற்பயிரில் ஏற்படும் பூச்சி...