×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று திடீர் கைது!: 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிமுக பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கினார் என்ற புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் உடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகுத்து பின்பு காங்கேயனுடைய சட்டமன்ற உறுப்பினராக ஆரம்ப காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலமாக அரசியலில் தொடர்ந்து தன்னை மிகப்பெரிய ஆளாக முன்னிறுத்தி கொண்டவர் தான் இவர். ஆகினும் சமீப காலமாக இவர் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசிவந்தார். இவர் ஆரம்பத்திலிருந்து வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து அதிமுகவின் ஒரு அங்கமாகவே இருக்க நினைத்தார்.

இதற்காக அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அதிமுகவில் நெருங்கிய ஒருவராக இருந்த இவர், மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததன் அடிப்படையில் தான், பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுகவின் தலைமை அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது. இந்நிலையில் கே.சி பழனிசாமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தான் கட்சியில் நீடிப்பதாக கூறியதோடு பலரையும் ஏமாற்றி வந்ததாகவும், அதிமுக போலி இணையதளம் நடத்தி மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த போலீசார் விசாரணை நடத்திய கையோடு கே.சி பழனிசாமியை கைது செய்தனர். தொடர் விசாரணைக்காக அவர் சூலூர் காவல் நிலையத்துக்கு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் காவல் நிலையத்தில் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : KC Palanisamy ,Former ,AIADMK ,arrest , Former AIADMK MP KC Palanisamy, Arrested, 11 Div
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...