×

விளையாட்டு துளிகள்

* இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினராவதற்கு முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் விண்ணப்பித்துள்ளார். தேர்வுக் குழு தலைவராக அவர் நியமிக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
*  நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 1500 பயிற்சியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். n வங்கதேச அணியுடன் லாகூரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் 20 ஓவரில் 141/5 (தமிம் இக்பால் 39, முகமது நயிம் 43). பாகிஸ்தான் 19.3 ஓவரில் 142/5 (அசான் அலி 36, சோயிப் மாலிக் 58*).
* இந்தியா ஏ அணியுடன் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் (அதிகாரப்பூர்வமற்றது), நியூசிலாந்து ஏ அணி 29 ரன் வித்தியாசத்தில் வென்றது. நியூசி. ஏ 50 ஓவரில் 295/7 (ஜார்ஜ் வொர்க்கர் 135, நீஷம் 33*, கோல் மெக்கான்சி 56). இந்தியா ஏ 50 ஓவரில் 266/9 (அகர்வால் 37, இஷான் 44, விஜய் ஷங்கர் 41, குருணல் 51, அக்சர் 24).Tags : cricket team selection committee ,Indian , Indian cricket team selection committee, former fast bowler, Ajit Agarkar
× RELATED இணையதள விளையாட்டோடு ஆன்லைன் வகுப்பு...