×

பராமரிப்பு பணி காரணமாக சி.பி.எல்.நகர் மயான பூமி 3ம் தேதி வரை இயங்காது: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மணலி மண்டலம் சி.பி.எல்.நகர் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் வரும் 3ம் தேதி வரை இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள சாஸ்திரி நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, மணலி மண்டலம், வார்டு-18, சி.பி.எல் நகரில் உள்ள மயான பூமியின் எரிவாயு தகனமேடை இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இன்று முதல் வரும் 3ம் தேதி  வரை இந்த மயான பூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில்  உள்ள சாஸ்திரி நகர் மயானபூமி எரிவாயு தகன மேடையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : CPL Nagar ,Cpl Nagar No Earth , Sand Zone, Cplnagar Fine Earth, Corporation
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...