×

டெல்லி பாஜ வேட்பாளர் மீது வழக்குப் பதிவு: ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாடல் டவுன் தொகுதியில் பாஜ வேட்பாளராக கபில் மிஸ்ரா போட்டியிடுகிறார். இவர் சில தினங்களுக்கு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிப்ரவரி 8ம் தி நடக்கும் தேர்தலானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போராகும்,’ என கூறியுள்ளார். மற்றொரு டிவிட்டில், ‘ஷாகின்பாக் பகுதி டெல்லியின் மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது,’ என குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில், மிஸ்ராவின் சர்ச்சைக்குரிய இந்த பதிவை நீக்கும்படி டிவிட்டரிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி டெல்லி போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Tags : BJP ,Delhi ,candidate ,Case , Delhi BJP Candidate, Case Record, Commission
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...