×

ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு நித்யானந்தா, போலீசாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: நித்யானந்தாவுக்கு  வழங்கிப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி, நித்யானந்தாவுக்கும், கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கும் கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு ராம்நகரம் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத்தில் சீடர்களாக இருந்த லெனில்  கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரின் ேபரில் நித்யானந்தாவை  பிடதி போலீசார் கடந்த 2010 ஏப்ரல் 11ம் தேதி கைது செய்தனர்.  53 நாட்கள்  சிறையில் இருந்தபிறகு ‘‘விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,  விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்ககூடாது,  வெளிநாடு செல்லக்கூடாது’’ என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்து  நித்யானந்தாவை, கடந்த 2010 ஜூன் 11ம் தேதி ஜாமீனில் கர்நாடக உயர் நீதிமன்றம்  விடுதலை செய்தது. இந்நிலையில், லெனின் கருப்பன் கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நித்யானந்தா மீது  ராம்நகரம் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது.

நிபந்தனை  ஜாமீனில் விடுதலையாகியுள்ள அவர், இதுவரை 50க்கும் மேற்பட்ட வழக்கு  விசாரணையில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்.  அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இருப்பினும், அவர்  வெளிநாட்டிற்கு தப்பியோடி உள்ளார். ஆனால், ராம்நகரம் நீதிமன்றத்தில்  நடந்துவரும் விசாரணையின் போது, நித்யானந்தா இந்தியாவில் இருப்பதாக அவரது  வக்கீ–்ல்கள் பொய் தகவலை தெரிவித்து வருகிறார்கள். எனவே, நீதிமன்ற  உத்தரவை மதிக்காததால், நித்யானந்தாவுக்கு வழங்கியுள்ள ஜாமீனை  ரத்து செய்ய வேண்டும், வெளிநாட்டில் பதுங்கியுள்ள அவரை உடனடியாக இந்தியா  கொண்டுவர உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இது, நீதிபதி ஜான்மைக்கல் டி.குன்ஹா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி  நித்யானந்தா, கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

Tags : Nithyananda ,High Court ,cancellation , Bail, Nithyananda, High Court, Notices
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...