×

பெரியார் சிலை உடைப்பு டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைளை யாரேனும் உடைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உளள் கலியபேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அதிகாலை உடைத்து சேதப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, ‘பெரியார் மற்றும் தமிழகத்தில் உள்ள பிற தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக காவல் துறை மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் உயர் போலீசாருக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Periyar Statue Breakdown DGP Warning , Periyar Statue, Breakdown, DGP, Warning
× RELATED தமிழகத்தில் இனிமேல் 5 பேருக்கு மேல்...