×

தேங்காய் விலை அதிகரிப்பு

சேலம்: தமிழகத்தில் விளைச்சல் சரிந்த காரணத்தால், தேங்காய் டன்னுக்கு ரூ.5,000 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு போதிய மழை இல்லாததால், தென்னை மரங்களில் காய்ப்பு குறைந்தது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஓரளவுக்கு மழை கைக்கொடுத்துள்ளது. இதன் பலன் நடப்பாண்டு இறுதியில் தான் கிடைக்கும். இதுகுறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மூன்று மாதமாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. நேற்று நிலவரப்படி டன்னுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து, ரூ.33 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Coconut, price, increase
× RELATED சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13...