×

மதுரை-உசிலம்பட்டி அகலப்பாதையில் சோதனை ஓட்டம்

மதுரை: மதுரையிலிருந்து தேனி மாவட்டம், போடி வரையிலான 97 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பணி நடந்து வருகிறது. தற்போது மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை 37 கிமீ தூரத்திற்கு பணிகள் முடிந்து விட்டன. இதனையொட்டி நேற்று அகல ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. நேற்று மாலை 4.32 மணியளவில் சோதனை ரயில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், மதுரை கோட்ட மேலாளர் லெனின், முதன்மை நிர்வாக அதிகாரி சின்கா மற்றும் அதிகாரிகள் ரயிலில் பயணித்தனர். இந்த ரயில் 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. மாலை 4.52 மணிக்கு உசிலம்பட்டி ரயில் நிலையத்துக்கு 20 நிமிடங்களில் சென்ற டைந்தது.

Tags : Test ,bridge ,Madurai-Usilampatti ,Madurai-Usilampatti Bridge , Madurai-Usilampatti, broadway, test, flow
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்