×

கன்னியாகுமரியில் குவிந்த செவ்வாடை பக்தர்கள் சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், சூரிய உதயம், மறைவு ஆகியவற்றை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி   பிரசித்தி பெற்றதாகும். இவற்றை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வரலாற்றாய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என்று ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, பேரூராட்சி நிர்வாகம் அனைத்து துறைகளிலும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துள்ளன. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது.

தனியார் அமைப்புகள்  சார்பில் பூங்காக்கள், பொழுது போக்கு விளையாட்டுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் என்று அமைக்கப்பட்டுள்ளன.  இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். பிரபலமான ஐயப்ப சீசன் கடந்த 2  நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இதனால் ஐயப்ப பக்தர்களின் வருகை முற்றிலும் குறைந்துள்ளது. பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இதனால்  கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் செவ்வாடை பக்தர்கள், வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மார்கழி, தை மாதங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பெண் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து  செல்வார்கள். இவ்வாறு செல்லும் பெண் பக்தர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்து பகவதியம்மனை தரிப்பதை ஐதிகமாக கொண்டுள்ளனர். இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளனர். ஆகவே இன்று காலை திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்னதி தெரு, கடற்கரை சாலை உள்பட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள்  மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இப்படி குவிந்த சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே திரிவேணி சங்கமம் கடற்கரையில் குடும்பமாக நின்று சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

Tags : pilgrims ,Kanyakumari ,Mars , Mars pilgrims flock to Kanyakumari to watch the sunrise
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...