×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான காவலாளி மாயம்: போலீசார் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான காவலாளி கிருஷ்ண தாபா என்பவர் மாயமாகியுள்ளார். 2017ல் கொடநாட்டில் ஜெயலலிதா பங்களாவில் கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஓம்பகதூர் உயிரிழந்தார், கிருஷ்ண தாபா காயம் அடைந்தார். நேபாளத்தை சேர்ந்தவரான கிருஷ்ண தாபா குணமடைந்தவுடன் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு வேலைக்கு திரும்பியவர் கொடநாடு செல்லாமல் வேறு எங்கோ பணியில் சேர்ந்துவிட்டார். வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தற்போது போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ண தாபாவிடம் செல்போன் இல்லாததால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


Tags : magician ,murder ,Kodanadu ,police investigation , Kodanadu murder, robbery, witness, watchman, magic
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...