×

தூக்கிலிட தயார் நிலையில் திகார்!! ..கடைசி விருப்பம் என்ன? யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்? .. சொல்ல மறுக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்..

டெல்லி : நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளிகளை அவர்களது குடும்பத்தினர் பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பு சந்திக்கலாம் என்று திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட திகார் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஒத்திகையும் கடந்த வாரம் நடத்தப்பட்டது. 4 கைதிகளின் எடை கொண்ட சாக்கு மூட்டையை தூக்கில் போட்டு, ஊழியர்கள் ஒத்திகை பார்த்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தினரை கடைசியாக சந்திக்க விரும்பினால்,அவர்களது பெயரை தெரிவிக்குமாறு  வினய் சர்மா, அக்சய் குமார் சிங், முகேஷ்குமார் சிங் மற்றும் பவன் ஆதிய 4 குற்றவாளிகளிடம் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இது பற்றி குற்றவாளிகள் 4 பேரும் பதில் ஏதும் கூறவில்லை என சிறை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளிடம் அவர்களின் கடைசி விருப்பம் என்ன என்று எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.ஆனால் குற்றவாளிகள் இதுவரை மவுனம் காத்து வருகின்றனர்.பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பவன் சலாத் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : convicts , Nirbhaya, hanging, mercy petition, thug prison, guilty
× RELATED ராஜிவ் கொலையில் ஆயுள் சிறை பெற்று...