×

பாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம்: எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க... பங்களாதேஷ் வீரர் ட்வீட்

டாக்கா: பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி புறப்படுவதற்கு முன்பு ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அணியின் சக வீரர்களுடன் சேர்ந்து டாக்காவில் ஒரு செல்பி எடுத்த ரஹ்மான், அந்த படத்தை ட்விட் செய்துள்ளார். அதில், ‘பாகிஸ்தானுக்குச் செல்கிறோம்; உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் செல்ல தயங்கியது.

இருப்பினும், இரு அணிகளின் அதிகாரிகளும் துபாயில் சந்தித்து, இருநாடுகளுக்கிடையே ஜனவரி முதல் ஏப்ரல் வரை பாகிஸ்தானில் மூன்று டி 20, இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் பங்களாதேஷில் ஒருநாள் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. டி20 தொடர் இன்று (ஜன. 24) முதல் 27ம் தேதி வரை லாகூரில் நடைபெறுகிறது. முஷ்பிகுர் ரஹீம் போன்ற மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தான் செல்வதற்கு எதிராக முடிவு செய்தனர். அதன்பிறகு, பங்களாதேஷ் பயிற்சி ஊழியர்களில் ஐந்து பேர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேறினர். பங்களாதேஷ் அணியில், மஹ்முதுல்லா (கேப்டன்), தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், நெய்ம் ஷேக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் குமர் தாஸ், எம்.டி. ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), அஹ்ஸன் அலி, அமத் பட், ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), மூசா கான், ஷாதாப் கான், ஷாஹீன் ஷா அஃப்ரிதி , உஸ்மான் காதிர் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Tags : Pakistan ,player ,Bangladesh ,Bangladeshi , Pakistani, Prayer, Bangladeshi player
× RELATED மாணவர்கள் அமைப்பினர் தீவிரம்...