×

திருவள்ளூர் அருகே சுங்கச்சாவடி காவலர் கொலை: வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் திருநின்றயூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டோல்கிட்டில் பணியில் இருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னையைடுத்த திருநின்றயூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பட்டாபிராம் அருகே சென்னை வண்டலூர்,மீஞ்சூர் 400 அடி வெளிப்பட்ட சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் சுங்கச்சாவடியில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல பணியில் இருந்தபோது அதேபகுதியில் உள்ள நரேஷ்குமார், சிவகுமார் ஆகிய 2 லாரி ஓட்டுனர்கள், தங்களது 2 லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பல்சர் மற்றும் புல்லட்டில் வந்த அடையாளம் தெரியாத வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் சிவகுமாரையும், நரேஷ்குமாரையும், அங்கிருந்த இருப்பு கம்பியை எடுத்து கடுமையாக தாக்கி செல்போனையும், 4 ஆயிரம் பணத்தையும் பறித்துள்ளனர்.  இருவரின் சத்தம்கேட்டு வெங்கடேசன் ஓடிவந்தபோது அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் சிவரகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைக்கண்ட மற்றொரு ஓட்டுநர் நரேஷ்குமார் கொள்ளையர்களிடமிருந்து தப்பித்து லாரியை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வெங்கடேசன் உயிரிழந்ததை கண்ட கொள்ளையர்கள் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர். இதுகுறித்து காவல்த் துறை கட்டுப்பாட்டு அறிக்கை கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மண்டை உடைந்த சிவக்குமாரை கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது வழிப்பறி கொள்ளையர்கள் பயணித்த எல்லாப்பகுதிகளிலும் அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது, வெள்ளைவேட்டில் முதலில் 2 பேரை தாக்கி வழிப்பறி செய்ததும், பிறகு அங்கிருந்து வந்து நெவிலிச்சேரியில் அசோக் என்பவரை கத்தியால் வெட்டி புல்லட் வாகனத்தையும், பணம் மற்றும் செல்போனையும் பறித்து கொண்டு வந்ததும், அதன்பிறகே இந்து வந்து சுங்கச்சாவடியில் வழிப்பறி செய்துள்ளதும்  தெரியவந்தது. இதில் வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவரை செய்வாய்ப்பேட்டை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags : Murder ,Customs Chairperson ,Attorneys Thiruvallur ,security murder ,Tollgate , Thiruvallur, Customs, Guards, Murder, Wayfarers, Robbers, Attacks
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...