×

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை உடைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம்: போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம்  சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சாலவாக்கம் அடுத்த கலியம்பேட்டை பகுதியில் பெரியார் சிலை அதிகாலையில் உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் உடைக்கப்பட்டதன் காரணமாக சாலவாக்கம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மிகப்பெரிய ஒன்றியமாக கருதப்படுவது சாலவாக்கம். இந்த சாலவாக்கம் பகுதியை அடுத்த கலியம்பேட்டையானது தற்பொழுது  திமுக சார்பில் செயல்பட்டுவருகிறது.

தற்போது இந்த சிலை உடைப்பு சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவர்களிடம் சென்று கேட்டபோது, இப்பகுதியில் உள்ள யாரும் பெரியார் சிலையை உடைக்க வாய்ப்பில்லை என்றும், மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய பகுதியாக காஞ்சிபுர மாவட்டம் இருப்பதால் சிலை உடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சமீபகாலமாக ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவிவந்த நிலையில் தற்பொழுது இந்த சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அங்கு 5க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அங்குள்ள சிசிடிவி காட்சியில் மர்ம நபர்களை தேடும் பணியிலும் தற்பொழுது ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இந்த சிலை உடைப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : persons ,Periyar ,Police investigation ,statue ,Kanchipuram , Kanchipuram, Periyar Statue, Mysterious People, Escapes, Police, Investigations
× RELATED புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு...