×

நெல்லை, தூத்துக்குடியில் அமலானது 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' : எந்த ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைத்தாரர்கள் பொருட்களை வாங்கலாம்

சென்னை : ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

*முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடியில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

*நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன்  திட்டம் கடந்த ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

*வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி இன்று அமல்

*இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள், தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கலாம்.

*இந்த திட்டம் முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

*ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம்.

*வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

*தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

*ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Paddy ,Thoothukudi ,Implementation ,Country ,One Country ,Nellai District , One Country, One Ration, Card, Plan, Tirunelveli, Thoothukudi, Amal, Tamil Nadu
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...