×

வீரதீரச்செயல் விருது பெற்ற சிறுவர், சிறுமிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்: கடினமான சூழல்களில் தங்கள் வீரத்தைக் காட்டியுள்ளதாக பாராட்டு

டெல்லி: வீரதீரச்செயல் விருது பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். கலை, கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு, வீர சாகசம் போன்ற பிரிவுகளில் பால சக்தி புரஸ்கர் விருது பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பிரதமர் உரையாடி வருகிறார். நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து இந்த மாணவ மாணவிகள் விருது பெற்றனர். 5 முதல் 18 வயதுக்குட்பட்ட இந்த 49 குழந்தைகளும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாகவும் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் வீரதீரச்செயல் விருது பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். சிறிய வயதிலேயே செயற்கரிய செயல்களை நிகழ்த்திய சிறுவர், சிறுமிகளை பார்த்து வியப்படைகிறேன். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி சிறுவர்களுக்கு தங்கள் சாதனைகள் உத்வேகமூட்டுவதாக இருக்கும். கடினமான சூழல்களில் சிறுவர், சிறுமிகள் தங்கள் வீரத்தைக் காட்டியுள்ளதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.


Tags : boys ,Modi ,girls ,Children , Heroic Marketing Award, Children, Girl, Prime Minister Modi, Discussion
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு