திருவண்ணாமலையில் பரபரப்பு கோயில் புற்றில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கோயில் அருகே உள்ள புற்றில் இருந்து நாகப்பாம்பு வெளியே வந்ததை பார்ப்பதற்காக மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில், கிளிப்பட்டு அருகே சாலையோரம் ஓம்சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகே உள்ள புற்றுக்கு மலர்கள் தூவியும், மஞ்சள், குங்குமம் வைத்தும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை இந்த புற்றின் மேல் நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.

இத்தகவல் அப்பகுதியில் பரவ பாம்பை பார்ப்பதற்காக அங்கு மக்கள் குவித்தனர். சிறிது நேரத்தில் அந்த பாம்பு புற்றின் மேல் பகுதியில் படுத்துக்கொண்டது. மக்கள் கூட்டம் திரண்டிருந்த போதிலும் புற்றுக்குள் செல்லாமல் நீண்ட நேரம் வெளியிலேயே இருந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த நாகப்பாம்பை பார்த்து வணங்கிவிட்டு சென்றனர். ஏராளமானோர் இந்த நிகழ்வை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த பாம்பு புற்றுக்குள் சென்று விட்டது.

Related Stories: