×

7 பேர் விடுதலைக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:  உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவை மேற்க்கோள் காட்டி சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேர் விடுதலைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிட்டிருப்பதால் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 15 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் இருப்பது அரசிய சட்டத்திற்கு விரோதமானது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அது  குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது ஆளுநரை சந்தித்து தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறவோ இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி ஆளுநரை உடனடியாக நேரில் சந்தித்து 7 பேரின் விடுதலைக்கான ஒப்புதலை தாமதமின்றி பெற்றிடவேண்டுமென்று முதலமைச்சரை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags : persons ,Governor ,release ,Stalin , Liberation, Governor, Consent, MK Stalin, Emphasis
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...